தக்காளி சாம்பார் எளிய‌ முறை

Thakkali Sambar Recipe / Tomato Sambar Easy Preparation Method

தக்காளி சாம்பார் செய்ய தேவையான‌ பொருட்கள்

மைசூர் பருப்பு/துவரம் பருப்பு‍‍1/2 கப்
தக்காளி2 (நறுக்கியது).
பச்சைமிளகாய் 2
தண்ணீர் தேவையான‌ அளவு
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள்ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
புளிச்சாறுஒரு டீஸ்பூன்
உப்புதேவையான அளவு
கொத்தமல்லிதேவையான‌ அளவு

தக்காளி சாம்பார் சிம்பிளாக‌ செய்து சாப்பிடும் முறை இது. தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதவர்களுக்கு சிறிது சுவையுடனும் எளிய‌ முறையில் தயார் செய்யவும் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப்பார்த்து முயற்சித்து எப்படி உதவியது என‌ பகிருங்கள். தமிழ் English தக்காளி சாம்பார் செய்வது எப்படி பருப்பை கழுவவும் , பின்னர் குக்கரில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கிக்கொள்ளவும். விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். பருப்புடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான‌ உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின் புளிச்சாறு ஊற்றி, அடுப்பில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். வாணலியில், எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்துக்கொள்ளவும். சிறிது நெரத்திற்குப்பின் இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறினால், தக்காளி சாம்பார் ரெடி!!! தக்காளி சாம்பார் எப்படி செய்வது

You May Like these Recipes