பாறை மீன் குழம்பு

Paarai / Mackerel Fish Gravy (Kulambu)

பாறை மீன் குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

பாறை மீன்‍‍1/2 கிலோ
சின்ன வெங்காயம்100 கி.
தக்காளி3
பச்சை மிளகாய் 6 (நடுவில் கீறிக்கொள்ளவும்)
தேங்காய்பெரிய மூடி 1
ஜீரகம்1 டீஸ்பூன்
வெந்தயம்1 டீஸ்பூன்
புளிஎலுமிச்சை அளவு
மிளகாய் தூள்2 1/2 தே.க
மல்லித்தூள்2 தே.க
மஞ்சள் தூள்1/2 தே.க
மாங்காய் 1 முழுசு
தேங்காய் எண்ணெய் 4 தே.க
உப்புதேவையான அளவு

பாறை மீன் குழம்பு எப்படி செய்வது

  1. மீனை நீரில் நன்கு கழுவிக் தயார் செய்ய‌ வேண்டும்

  2. தேங்காயை துருவி அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் புளியையும் ஊற வைக்கவும்.

  3. வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி விடவும். மாங்காயை துண்டாக நறுக்கவும்.

  4. அடுப்பில் சட்டியை/ வாணலி வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொறிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.

  5. பிறகு தேங்காய் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வரை கிளரவும். அடுத்து புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். அதனுடன் கழுவி வைத்த மீனையும் உப்பையும் போடவும்.

  6. 10 நிமிடம் கழித்து மிளகாய்தூள் வாசனை போனதும் மாங்காயை போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும். ம்ம்ம்ம்ம்ம்................ சுவையான மீன் குழம்பு ரெடி. சுவைத்து மகிழுங்கள்

எப்படி செய்வது

    You May Like these Recipes