வெல்ல‌ தோசை / இனிப்பு தோசை

வெல்ல‌ தோசை / இனிப்பு தோசை செய்ய தேவையான‌ பொருட்கள்

இட்லி அரிசி 100 கிராம்
பச்சரிசி 50 கிராம்
உளுந்து 25 கிராம்
ஏலக்காய் 2
பொடித்த வெல்லம் 100 கிராம்
தேங்காய்த் துருவல் 100 கிராம்
நெய் தேவையான அளவு

வெல்ல‌ தோசை / இனிப்பு தோசை எப்படி செய்வது

  1. இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை 5 மணி நேரமும், உளுந்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  2. தோசைக்கல்லில் மாவை தோசையாக வார்த்து, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

  3. இதே மாவை பணியாரக்கல்லில் ஊற்றி, நெய் சேர்த்து பணியாரமாகவும் சுட்டெடுக்கலாம்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...