உருளைக்கிழங்கு 3
காலிஃப்ளவர் 1 சிறிய‌ பூ
முட்டைக்கோஸ் 100 கிராம்
பங்களூர் கத்தரிக்காய் 1
பீன்ஸ், பட்டாணி (தேவையென்றால்) தேவைக்கேற்ப‌
வெங்காயம் 3
பூண்டு 8 பல்
பச்சைமிளகாய் 6
பட்டை 2 துண்டு
கிராம்பு 4
ஏலம் 2
கசகசசா 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு 8
தேங்காய்ப் பால் 1 கப்
உப்பு தேவையான‌ அளவு
எண்ணெய் தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. முந்திரியையும், கசகசாவையும் 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊற‌ விடவும். காய்களைப் பொடியாக‌ அரியவும்.

  2. சிறிது எண்ணெயில் வெங்காயம், பூண்டை வதக்கி, முந்திரி கசகசாவுடன் சேர்த்து விழுதாக‌ அரைக்கவும்.

  3. சிறிது என்ணெயில் மசாலாப் பொருட்கள், பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி , அரைத்த‌ விழுதைச் சேர்த்து நன்கு என்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  4. வெந்த‌ காய்களையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க‌ விட்டு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு நிமிடம் இளம் தீயில் தளைத்த‌ பின் இறக்கவும். சப்பாத்தி, புலாவ், பிரியாணியுடன் உண்ணவும்.

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...