வரகு - ராகி தோசை

வரகு - ராகி தோசை செய்ய தேவையான‌ பொருட்கள்

வரகு அரிசி ‍200 கிராம்
கோதுமை 100 கிராம்
ராகி 100 கிராம்
உளுந்து 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு
வெந்தயம் 2 டீஸ்பூன்
நெய் (அ) நல்லெண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

வரகு - ராகி தோசை எப்படி செய்வது

  1. வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

  2. எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும்.

  3. 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். மிகவும் சத்தான தோசை தயார்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...