சூரை மீன் குழம்பு

Soorai Meen Kuzhambu / Tuna fish curry Recipe

சூரை மீன் குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

சூரை மீன்‍‍1/2 கிலோ
பெரிய வெங்காயம்1 (நறுக்கியது).
தக்காளி2 நடுத்தர அளவு, பொடியாக நறுக்கப்பட்டது
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
பூண்டு4-5 பல் (நறுக்கியது)
புளிதேவையான அளவு
மிளகாய் / குழம்பு மிளகாய்த் தூள்1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்1 தேக்கரண்டி
மல்லித்தூள்1 தேக்கரண்டி
எண்ணெய் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை 2 தண்டு
தந்தூரி மசாலா1/2 டீஸ்பூன்
சீரகம் தூள் 1 தேக்கரண்டி
உப்புதேவைக்கேற்ப

தமிழ் English சூரை மீன் குழம்பு செய்வது எப்படி சூரை மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் இப்போது உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து (தேவைப்பட்டால்) கிளறி இறக்கி விட வேண்டும் இப்போது சுவையான சூரை மீன் குழம்பு ரெடி!!! சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் எப்படி செய்வது

You May Like these Recipes