மத்தி மீன் குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

மத்தி மீன்‍‍18 துண்டுகள்
தேங்காய் எண்ணை3 ஸ்பூன்.
வெந்தயம்1 ஸ்பூன்
இஞ்சி 1/2 ஸ்பூன் (பொடித்தது)
சின்ன வெங்காயம்15 (நான்காக நறுக்கியது)
பச்சை மிளகாய்3
தக்காளி நறுக்கியது1
புளி1/4 கப்
மஞ்சள் தூள்1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்1 ஸ்பூன்
உப்புதேவைகேற்ப
தேங்காய்ப் பால் 1 கப்
கறிவேப்பிலை 2 தண்டு
உப்புதேவையான அளவு

தமிழ் English மத்தி மீன் குழம்பு எப்படி செய்வது ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை காயவிட்டு அதில் வெந்தயத்தை போட்டு பொன்னிறமாக மாறியதும் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி இட்டு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிரமானதும் தக்காளியை போட்டு வதக்கி புளி சேர்த்து ,மஞ்சள்,மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும். கலவை கொதித்ததும் மீன் சேர்த்து உப்பு போட்டு மூடி 15 நிமிடம் மிதமான தீயில் விடவும். பிறகு கறிவேப்பிலையை போட்டு இறக்கி சுமார் 3 மணிநேரம் மூடிவைக்கவும். ம்ம்ம்ம்ம்ம்................ சுவையான மீன் குழம்பு ரெடி. சுவைத்து மகிழுங்கள் எப்படி செய்வது

You May Like these Recipes