சங்கரா மீன் குழம்பு

Sankara Meen Kuzhambu / Red Snapper fish curry Recipe

சங்கரா மீன் குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

சங்கரா மீன்‍‍1/2 கிலோ
பெரிய வெங்காயம்2.
தக்காளி2 நடுத்தர அளவு, பொடியாக நறுக்கப்பட்டது
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
பூண்டு8 பற்கள் - நசுக்கப்பட்ட
புளிதேவையான அளவு
மிளகாய் - மல்லித்தூள்/ குழம்பு மிளகாய்த் தூள்3 தேக்கரண்டி
மஞ்சள் தூள்1 தேக்கரண்டி
உப்புதேவைகேற்ப
நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 தண்டு
வெந்தயம்1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
வடகம் வெந்தயம் சீரகத்திற்குப் பதிலாக என்றால்2 தேக்கரண்டி

தமிழ் English சங்கரா மீன் குழம்பு எப்படி செய்வது ஒரு மண் பானையில் அல்லது கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி வெந்தயம், சீரகம் சேர்க்கவும். (வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்). பூண்டு பற்கள், பச்சை மிளகாய்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையைச் சேர்க்கவும். ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். வெளுக்கும் வரை வறுத்து நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து தக்காளி மென்மையாகும்வரை வேகவைக்கவும். பின் - மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். ஊறவைத்த புளியில் இருந்து புளிக்கரைசலைப் பிழித்து வெங்காயத்தோடு சேர்க்கவும் - தக்காளிச் சாறு. கூடுதல் தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால். மூடி 10 நிமிடங்களுககு மிதமானச் சூட்டில் வேகவைக்கவும். இப்போது மீனை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பானையை மூடவும். 5-6 நிமிடங்களுக்கு சிறு தீயி்ல் அல்லது மீன் வேகும்வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும். கறிவேப்பிலையால் அலங்கரித்து சூடான சாதத்தோடு பரிமாறவும். எப்படி செய்வது

You May Like these Recipes