ஜவ்வரிசி புலாவ்

Sabudana khichdi recipe / Sago Pulav Recipe

ஜவ்வரிசி புலாவ் செய்ய தேவையான‌ பொருட்கள்

ஜவ்வரிசி‍‍1 கப்
நிலக்கடலை50 கிராம்
வெங்காயம் 2
கேரட் 2
உருளைக்கிழங்கு 1
குடைமிளகாய் 1
தக்காளி 1
கடுகுஒரு தேக்கரண்டி
தயிர்ஒரு கப்
நெய்2 தேக்கரண்டி
பனீர்100 கிராம்
முந்திரி50 கிராம்
கடலைப்பருப்புஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்புஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
எண்ணெய்3 தேக்கரண்டி
தண்ணீர்அரை லிட்டர்
உப்புதேவையான அளவு

தமிழ் English ஜவ்வரிசி புலாவ் செய்வது எப்படி முதலில் ஜவ்வரிசியை ஒரு கப் தயிருடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 45 நிமிடங்கள் ஊறவைக்கவும். தக்காளி, காரட், உருளைக்கிழங்கு இவற்றை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாயையும் நீளவாக்கில் அரிய வேண்டும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம் நறுக்கி வைத்த காய்கறிகள் இவற்றை வதக்கி உப்பு சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். பிறகு நிலக்கடலையை சுத்தம் செய்து உடைத்து ஜவ்வரிசியுடன் (ஊறவைத்தது) சேர்த்து கடாயில் சேர்த்து கிளறவும். தனியாக பனீரை எண்ணெயில் பொரித்து அதையும் இதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும். கறிவேப்பிலை தூவி மணம் சேர்க்கலாம். ஜவ்வரிசி ஊறுவதற்கு மட்டுமே அதிக நேரம் தேவைபடுகின்றது. ஊறிவிட்டால் 15 நிமிடங்களில் புலாவ் செய்து விடலாம். ஜவ்வரிசி புலாவ் எப்படி செய்வது

You May Like these Recipes