ரவா கேசரி செய்ய தேவையான‌ பொருட்கள்

ரவை1/2 கப்
சர்க்கரை1 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு 1 சிட்டிகை
கேசரி பவுடர்2 சிட்டிகை
நெய் 4 ஸ்பூன்
முந்திரி7
ஏலக்காய் பவுடர் 1/2 ஸ்பூன்

தமிழ் English ரவா கேசரி செய்வது எப்படி முதலில் காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின் காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். காடாயில் 2 கப் தண்ணீர் , 1 சிட்டிகை உப்பு , 2 சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். இப்பொழுது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளரவும். சிறுது நெய் ஊற்றி கேசரியை கிளறவும். முந்திரியை தூவி பரிமாறவும். How to Prepare Rava Kesari

You May Like these Recipes