பஞ்சாபி சப்ஜி செய்ய‌ தேவையான‌ பொருட்கள்

உருளைக்கிழங்கு 1/2 கிலோ
பீன்ஸ் 1/2 கிலோ
கேரட் 1/2 கிலோ
பட்டாணி 1/2 கிலோ
காலிஃப்ளவர் 1/2 கிலோ
பச்சை மிளகாய் 2
வெங்காயம் 3
இஞ்சித் துருவல் 1/2 டீஸ்பூண்
பூண்டு 4
தனியாத்தூள் 1/2 டீஸ்பூண்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூண்
கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூண்
ஆம்ச்சூர் 1/2 டீஸ்பூண்
தயிர் 1/2 கப்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூண்
எண்ணெய் தேவையான‌ அளவு
உப்பு தேவையான‌ அளவு

பஞ்சாபி சப்ஜி எப்படி செய்வது

  1. காய்களை ஒரு இஞ்ச் நீளத்தில் துண்டுகளாக‌ நறுக்கவும். வெங்காயத்தினை நீளவாக்கில் அரியவும்.

  2. பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை வதக்கவும்

  3. காய்கறிகளையும் அவற்றுடன் சேர்த்து வதக்கவும்.

  4. உப்பு, காரம் மசாலாக்களை சேர்த்து காய்களை நன்றாக‌ வேக‌ வைக்கவும்.

  5. ஆம்ச்சூர் தூவி கடைந்த‌ தயிரை ஊற்றி, ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...