பட்டாணி பனீர் மசாலா

Paneer Butter Masala | Paneer Pattani Gravy

பட்டாணி 1 கப்
பனீர் 200 கிராம்
வெங்காயம் இரண்டு
தக்காளி 4
இஞ்சி பூண்டு விழுது> 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 டீ ஸ்பூன்
கரம் மசாலா 1 டீஸ்பூன்
வெண்ணெய் 50 கிராம்
உப்பு தேவையான அளவு
மல்லித்தழை சிறிதளவு

பட்டாணி பனீர் மசாலா எப்படி செய்வது

  1. வெங்காயம், தக்காளி, மல்லித்தழையை பொடியாக‌ நறுக்கவும். பின் பனீரை சிறுதுண்டுகளாக‌ நறுக்கவும்.

  2. வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருக்கி வெங்காயம், சிறிதளவு உப்பினை சேர்த்து வதக்கவும்.

  3. பின்னர் அதனுடன் தக்காளி , இஞ்சி, பூண்டு விழுது, பட்டாணி, மிளகாய்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாடை போக வதக்குங்கள்.

  4. கடைசியில் பனீர், கரம் மாசாலா சேர்த்து வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் நறுக்கிய‌ மல்லித்தழை தூவி இறக்குங்கள்.

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...