பச்சைப் பயறு தோசை

பச்சைப் பயறு தோசை செய்ய தேவையான‌ பொருட்கள்

பச்சைப் பயறு 100 கிராம்
பெரிய வெங்காயம் ஒன்று
காய்ந்த மிளகாய் 3 (அல்லது காரத்துக்கேற்ப)
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் (அ) நெய் தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு தேவையான அளவு

பச்சைப் பயறு தோசை எப்படி செய்வது

  1. பச்சைப் பயறைக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  2. அதில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும்.

  3. சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி, நல்லெண்ணெய் (அ) நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...