மெக்சிகன் ரைஸ்

மெக்சிகன் ரைஸ் செய்ய தேவையான‌ பொருட்கள்

முட்டைக்கோஸ் 50 கிராம்
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சை மிள‌காய் 4
குடைமிளகாய் 1
பூண்டு 2 பல்
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
அரிசி 1 கப்
உப்பு தேவையான அளவு

மெக்சிகன் ரைஸ் எப்படி செய்வது

  1. முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.

  2. பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.

  3. நிறம் மாறியதும் அதை எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் போட்டு அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆன் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைக்கோஸை போட்டு வதக்கி எடுக்கவும். மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து மிளகாய்த் தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.

  5. காய் வதங்கியதும் இறக்கி வதக்கிய வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி பரிமாறவும்.

  6. இதை குக்கரில் செய்யும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, அரிசிக்கு ஏற்ற தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...