லவங்க லதிகா / லதா

லவங்க லதிகா / லதா செய்ய தேவையான‌ பொருட்கள்

மைதா மாவு 3/4 கப்
டால்டா 2 மேசைக்கரண்டி
சீனி அரை கப்
எண்ணெய் தேவையான அளவு
ஏலக்காய் எசன்ஸ் 2 சிட்டிகை

லவங்க லதிகா / லதா செய்வது எப்படி

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் டால்டாவைச் சேர்த்து ஒன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவு மிருதுவாகும் வரை பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பிசைந்து வைத்த‌ மாவை நீளவாக்கில் தேய்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  2. உருண்டை ஒன்றை எடுத்து அப்பளம் அளவிற்கு தீட்டவும். அதில் மேல் பக்கத்தையும் கீழ்பக்கத்தையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து உள்பக்கமாக மடக்கவும்.

  3. பின்னர் மற்றொரு பக்கம் திருப்பி வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் இணைத்து நடுவில் கிராம்பை குத்தி வைக்கவும். இதைப் போல மற்ற உருண்டைகளையும் செய்து வைக்கவும்.

  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். செய்து வைத்திருக்கும் லவங்க லத்திகாக்களைப் போட்டு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

  5. இன்னொரு பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் எசன்ஸ், கலர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.

  6. அதில் பொரித்து வைத்திருக்கும் பிஸ்கெட்டுகளை (லவங்க லதிகா) போட்டு மேலே பாகை ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பாகு லதிகாவுடன் சேர்ந்து நன்கு ஊற வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும். இப்பொழுது லவங்க லதிகா தயார்.

How to Prepare

Lavang Lata (Latika)

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...