பிஞ்சு வெண்டைக்காய்
1/2 கிலோ
மிளகாய்த்தூள்1 1/2 டீஸ்பூண்
பெரிய‌ வெங்காயம்3
தனியாத்தூள்1 டீஸ்பூண்
சீரகத்தூள்1/2 டீஸ்பூண்
தக்காளிச் சாறு1 கப்
தயிர்1 கப்
கரம் மசாலாத் தூள்1 டீஸ்பூண்
எண்ணெய்தேவையான‌ அளவு
உப்புதேவையான‌ அளவு

வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது

  1. வெண்டைக்காய்களை சுண்டு விரல் நீளத்துண்டுகளாக‌ நறுக்கவும். வெங்காயத்தினை நீளவாக்கில் அரியவும்.

  2. வெண்டைக்காயை சிறிது எண்ணையில் நன்றாக‌ வதக்கி தனியே வைத்துக்கொள்ளவும்.

  3. கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயத்தினை நன்று சிவக்க‌ வதக்கவும்.

  4. அதில் எல்லா விதமான‌ பொடிகளையும் சேர்த்து நன்கு வதக்கியபின் தக்காளிச்சாறு மற்றும் தயிர் சேர்த்து மசாலாவில் உள்ள‌ என்ணெய் பிரியும் வரை கொதிக்க‌ விடவும். இதில் வதங்கிய‌ வெண்டைக்காயைப்போட்டு நன்கு வற்றும் வரை வதக்கவும். சாதம், ரொட்டி, பரத்தா போன்றவற்றுடன் சூடாக‌ தொட்டுக்கொண்டால் சுவையாக‌ இருக்கும்.

எப்படி செய்வது

    You May Like these Recipes