புரோட்டா 3
சால்னா (கிரேவி / கறிக்குழம்பு) 1/4 கப்
முட்டை 2
வெங்காயம் 4
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவைக்கு
எண்ணெய் தேவையான‌ அளவு
Parotta 3
Mutton / Chicken Gravy 1/4 Cup
Egg 2
Onion 4
Tomato 2
Green Chillies 4
Curry Leaves Little
Coriander little
Salt As required
Oil As required

  1. பரோட்டாவை (parotta) கையால் பிய்த்து உதிர்த்து வைக்கவும். வெங்காயத்தினை பொடியாக‌ நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு ஆகியவற்றினை வதக்கவும்.
  2. நன்கு வதங்கிய‌ பின் இக்கலவையை குவித்து வைக்கவும். நடுவில் முட்டையை சேர்த்துக் கிளறவும்.
  3. முட்டை நன்கு பொரிந்த‌ பின்னர் சால்னாவினை ஊற்றி கிளறவும். இப்போது பரோட்டாவை சேர்த்துக்கொள்ளவும். மசாலா பரோட்டவில் நன்கு பிரளும்படி கிளறவும்.
  4. கொத்து புரோட்டா ரெடி. சூடாகச் சாப்பிடுதல் மேலும் ருசியானது.
  1. Tear / Cut Parotta and size it into pieces for later use. Slice the Onion into small pieces and fry it in the pan. Add Chillies, Curry leaves, Criander, Tomato, salt with onion in the pan and fry all of it.

  2. Add egg to this mixture and mix well with the mixture. Add the gravy now and mix well. Now add the Parotta pieces to the gravy and mix well to get the Egg Parotta/ Kothu Parotta. Serving hot adds more taste.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...