கருவாட்டு குழம்பு

Karuvattu Kulambu (Madurai Style) / DryFish Gravy

கருவாட்டு குழம்பு

கருவாட்டு குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

கருவாடு ‍‍1/2 கிலோ
சின்ன‌ வெங்காயம் 15 (நறுக்கியது), 5 நறுக்காத‌து.
தக்காளி 2 நடுத்தர அளவு, பொடியாக நறுக்கப்பட்டது
பூண்டு 10 பல் (நறுக்கியது), 5 நறுக்காத‌து
புளி எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மல்லித்தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை தேவைக்கேற்ப
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
கடுகு, உழுந்து 1 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

கருவாட்டு குழம்பு செய்வது எப்படி

  1. கருவாடை வெதுவெதுப்பான‌ நீரில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள‌வும்.

  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,நறுக்கப்படாத் சி.வெங்காயம் மற்றும் பூண்டு போட்டு, லேசாக‌ வதக்கிக் ஆறவிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. இப்போது வதக்கிய‌ பூண்டு, சி.வெங்காயத்தினை மிக்சரில் போட்டு, மிளகாய் தூள் சேர்த்து அரைக்க‌ வேண்டும். வளுவளுப்பா அரைந்ததும் அவ்விழுதினை புளித் தண்ணீர் சேர்க்கவும். பின் உப்பு சேர்க்கவும். பின் கலவையை கலக்கவும். தனியாக‌ வைத்துக்கொள்ளவும்.

  4. இப்போது கடுகு, வெந்தயம், உழுந்து அகியவற்றினை கடாயில் நன்கு வதக்கி கிளறி விட வேண்டும். பூண்டு வெந்ததும் நறுக்கப்பட்ட‌ சின்ன‌ வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய‌ பின் தக்காளியைச் சேர்க்கவும்.

  5. 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.

  6. இப்போது புளிக்கரைசல் மற்றும் விழுது கலவையை ஊற்றவும். 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

  7. நன்கு கொதித்ததும், கருவாடினை இடவும். 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக‌ விடவும்.

  8. இப்போது காரசாரமான‌ கருவாட்டு குழம்பு ரெடி!!!

எப்படி செய்வது

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...