கம்பு - சோள தோசை

கம்பு - சோள தோசை செய்ய தேவையான‌ பொருட்கள்

கம்பு 100 கிராம்
அரிசி 200 கிராம்
சோளம் 50 கிராம்
உளுந்து 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு

கம்பு - சோள தோசை எப்படி செய்வது

  1. அரிசி, கம்பு, சோளத்தை தண்ணீரில் 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  3. இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவை சிறிது நேரம் புளிக்க வைக்கவும்.

  4. பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...