Eral Surakkai Kulambu

இறால் சுரைக்காய் குழம்பு செய்ய தேவையான‌ பொருட்கள்

இறால் ‍கால் கிலோ
சிறிய சுரைக்காய் ஒன்று
வெங்காயம் 100 கிராம்
தக்காளி 3
பச்சை மிளகாய் 2
புளி நெல்லிக்காய் அளவு
சோம்பு, சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
எண்ணெய் 4 தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி

இறால் சுரைக்காய் குழம்பு எப்படி செய்வது

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

  2. அதனுடன் இறால், நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சோம்பு, சீரகத்தூள் அல்லது சாம்பார் பொடி போட்டு புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  3. தேவைக்கேற்ப‌ தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். நன்கு கொதித்து வற்றியவுடன் இறக்கவும்.

  4. இறால் அவரை கலவையுடன் புளித் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். இறால் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

  5. சுவையான‌ இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...