கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்ய தேவையான‌ பொருட்கள்

சிக்கன் ‍‍1 கிலோ
மிளகாய் தூள் 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
காய்ந்த மிளகாய் 4
எலுமிச்சை அரை மூடி
கலர்பொடி 1/4 தேக்கரண்டி (தேவையானால்)
கருவேப்பிலை 2 கொத்து
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி

  1. காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.

  2. கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிக்கனுடன் குழப்பி / பிசைந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

  3. 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.

  4. வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.

How to Prepare

Crispy Chilly Chicken

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...