சிக்கன் சீஸ் நகெட்ஸ்

Chicken Cheese Nuggets / Crispy Chicken Nuggets

Chicken Cheese Nuggets /  Crispy Chicken Nuggets

சிக்கன் சீஸ் நகெட்ஸ் செய்ய தேவையான‌ பொருட்கள்

சிக்கன் (போன்லெஸ்) 1/2 கிலோ
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பிரட் தூள் 1 கப்
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
முட்டை 2 என்ணம்
சீஸ் 100 கிராம்
உப்பு தேவையான அளவு

சிக்கன் சீஸ் நகெட்ஸ் எப்படி செய்வது

  1. போன்லெஸ் சிக்கன் பீஸ் உடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, பிரட் தூள், மிளகு தூள் ஆகியவற்றை கலந்து அரைத்து (மிக்சரில்) எடுக்கவும்.

  2. அரைத்து எடுத்தவற்றை நன்றாக‌ பிசைந்து கொல்ளவும். கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டால் அரை கையில் ஒட்டாமல் தவிர்க்கலாம்.

  3. பின் சிறிது கலவையை எடுத்து வடை உருவில் செய்து அதன் நடுவே சிறிது சீஸ் சேர்த்து செவ்வக‌ உருவினில் செய்து நக்கெட்ஸ் ஆக‌ செய்து கொள்ளவும்.

  4. இப்போது நக்கெட்ஸ் ஒன்றை எடுத்து, கலக்கப்பட்ட‌ முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளினை பிரட்டி வைத்துக் கொள்ள‌வும். இவ்வாறு அனைத்து நக்கெட்ஸ்களையும் இவ்வாறு பிரெட்டிங் செய்து கொள்ளவும்.

  5. பிரட்டிங்க் செய்த‌ பின்னர் அனைத்தையும் எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். இப்போது மொறுமொறுவான‌ சிக்கன் சீஸ் நகெட்ஸ் ரெடி.!!!!

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...