செட்டினாடு மீன் குழம்பு எப்படி செய்வது
ஒரு மண் கடாயில் எண்ணெயினை சூடாக்கவும். பின் பெருஞ்சீரகத்தினை இட்டு ஒரு நிமிடம் அதை வதக்கவும்.
கூடவே வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு சமைக்கவும்.
மசாலா பொடியினைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றைமிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்.
இப்போது அதே கடையில், எண்ணெயினை சூடாக்கவும். கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தங்க நிறத்தில் வறுத்தெடுக்கவும்.
அரைத்து வைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்து நன்றாக கலக்கவும். எண்ணெய் பிரித்தெடுக்கும் வரை சமைக்கவும். நீளமாக வெட்டப்பட்ட தக்காளியைச் சேர்த்து நன்றாக சமைக்கவும்.
புளி கரசலும், தேவைகேற்ற தண்ணீரும் சேர்க்கவும். நன்கு கலந்து அதை கொதிக்க விடுங்கள்.
இப்போது மீன் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
மீனை 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஸ்டவ்வை சிம்மில் வைத்து வேக வைக்கவும். பின் கொத்தமல்லி இலைகளைப் போட்டு மூடவும்..
செட்டினாடு மீன் குழம்பு ரெடி. சாதத்துடன் பரிமாறவும்.