காலிஃப்ளவர் மசாலா தோசை

காலிஃப்ளவர் மசாலா தோசை செய்ய தேவையான‌ பொருட்கள்

தோசை மாவு ‍200 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் 100 கிராம்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் தேவையான அளவு
பெரிய வெங்காயம் 100 கிராம்
பெங்களூரு தக்காளி ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

காலிஃப்ளவர் மசாலா தோசை எப்படி செய்வது

  1. கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி, பின்னர் காலிஃப்ளவரையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

  2. இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

  3. தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு… தயார் செய்து வைத்த காலிஃப்வளர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுத்தால்… சூடான காலிஃப்வளர் மசாலா தோசை ரெடி!

இதுபோன்ற‌ குறிப்புகள்

ருசி !! : விதமாய் சமைத்தாலும் புசித்த‌ பின்னர் தான் தெரியும் ருசி...