கேப்சிகம் பொரியல் செய்ய தேவையான‌ பொருட்கள்

குடைமிளகாய்3
வெங்காயம்1
பொட்டு கடலை 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ப்ரூட் ஜாம் போதிய அளவு எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு

தமிழ் English கேப்சிகம் / குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை பொடித்து வைக்கவும். கடாயில் தாளிக்க வெண்டியனவை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும். பின் குடமிளகாயுடன் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின் பொடித்து வைத்த பொட்டு கடலைப் பொடியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குடை மிளகாய் பொரியல் தயார். How to Prepare Capsicum Veggy Fry

You May Like these Recipes